Saturday, January 10, 2009

பிடித்ததில் எடுத்தது ! 2009 Jan PIT Contest

'எடுத்ததில் பிடித்தது' என்று பார்க்கும்போது, அதில் வரும் ஏகப்பட்ட குவியலில் (சொல்லிக்க வேண்டியது தான் !! :)) 'பிடித்ததை எடுக்க' போராட்டம்.

வாங்க, நீங்களும் களத்தில குதிங்க. தெரிவில்லாத இக்குவியலில், உங்க செலக்ஷன் என்னன்னு பின்னூட்டுங்களேன்.

இந்த முறை, வோட்டிங் பார்த்து போட்டிக்குள்ள போகலாம் என எண்ணம் :))

கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் --- இன்னும் நான்கு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள வந்து, மேலும் உங்க பங்குக்கும் குழப்'பிட்'டுப் போங்க =:)))



படம் 1: அமெரிக்கத் தலைநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு ஆலய கோபுரம்.

வான் தொடும் வெண்மை
கண் படும் மென்மை.
சிற்பங்களின் அழகில்
தென்படும் பெண்மை.



படம் 2: சிகப்பு ரோஜா.

செக்கச் செவந்தவளே
செகப்பு ரோஜாவே !
பூக்களின் அரசியே
புன்னகைக்க வைப்பாயே !!!



படம் 3: பிங்க் பூக்கள்

பச்சைப் புற்களில்
பதுங்கும் பூக்களே,
பயம் கொள்ள வேண்டாம்
பறித்திட மாட்டோம் !!!



படம் 4: ஆரஞ்சுப் பூ

என்ன தான் பேரோ ?
ஆரஞ்சுப் பூவே !
குலை தள்ளும் அழகில்
கலை கண்டு மகிழ்வோம் !!!



படம் 5: வாத்துக்கள்

தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!



படம் 6: வண்ண மீன்கள்

எத்தனை வண்ணங்கள் இங்கு
அத்தனையுமே அழகு,
நீரின் குளிர்ச்சியிலே அவை
சேர்ந்து நிறைத்ததுவே !



படம் 7: மீசைக்கார மீன்கள்

கரை தொடும் நீரில்
நுரை தள்ள ஆடும்
மீசைக்கார மீன்களோடு, ஒரு
பாசக்கார வாத்து !!!



படம் 8: உரித்தால் ஒன்றுமில்லை

உருண்டு பருத்திருக்கும்
உரித்தால் ஒன்றுமில்லை.
புரிந்தால் வாழ்விலே
கவலை என்றுமில்லை !!!
(அப்பாடா, ஒரு தத்துவமும் சொல்லியாச்சு :)))


8 comments:

தராசு said...

மீ த பர்ஷ்ட்.

புகைப்படங்கள் அருமை,

ஆனால் கோடவெ கவிதைகளும் அருமையிலும் அருமை.

ஆரஞ்சுப் பூ மனம் கவர்ந்தது.

ராமலக்ஷ்மி said...

செக்கச் சிவந்தவளும் பதுங்கும் பூக்களும் அழகுடன் மிளிர்ந்தாலும் ஆலயம் வெல்கிறது.

//
தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!//

ரசித்தேன்:)!

வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் said...

ஆலயம்
அருமை

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

சரண் said...

ரோஜாப்பூ படம் மிக அருமை...

இதழ்களில் உள்ள பளபளப்பு அற்புதம்!!!

சதங்கா (Sathanga) said...

தராசு said...

// மீ த பர்ஷ்ட்.//

நீங்களே தான். :))

// புகைப்படங்கள் அருமை,

ஆனால் கோடவெ கவிதைகளும் அருமையிலும் அருமை.//

பேலன்ஸ்டா சொல்லியிருக்கீங்க உங்க பேரு போலவே.

// ஆரஞ்சுப் பூ மனம் கவர்ந்தது.//

வோட்டிங்க்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

// செக்கச் சிவந்தவளும் பதுங்கும் பூக்களும் அழகுடன் மிளிர்ந்தாலும் ஆலயம் வெல்கிறது.//

கவிதையாய்ச் சொல்லி, ஓட்டிட்டதற்கு மிக்க நன்றி
//
//
தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!//

ரசித்தேன்:)!
//

இந்த மாதிரி எழுதுவதெல்லாம் உங்க பதிவுகளில் இருந்து கத்துக்கிட்டது தான். உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை :)))

நான்கு வரிகளில் படத்தோடு போட்டி போடும் கவிதை எழுதுறாங்களே. நல்லா இருக்கே, நாமளும் எழுதலாம் எனப் பார்த்தால், அப்பதான் கஷ்டம் புரிகிறது. சட சடவென வார்த்தைகள் தெரிக்கிற அளவிற்கு இல்லேன்னாலும் ஏதோ என் அளவிற்கு :)))

// வெற்றிக்கு வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

திகழ்மிளிர் said...
//
ஆலயம்
அருமை
//

திகழ்மிளிர் வருகைக்கும் செலக்ஷனுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

சூர்யா said...

// ரோஜாப்பூ படம் மிக அருமை...

இதழ்களில் உள்ள பளபளப்பு அற்புதம்!!!//

ம்ம்ம். நாலு பேரு, நாலு விதம்னு சொல்லுவாங்களே, அது மாதிரியில்ல இருக்கு :)))

வருகைக்கும், செலக்ஷனுக்கும் மிக்க நன்றி !!!