நேற்று முன் தினம், ஒரு அரை நாள் அலுவலகம் சென்ற போது (பனியைப் பொருட்படுத்தாது, என் கடன் பணி செய்து கிடப்பதே :))) வழியில் எடுத்த புகைப்படங்கள், மற்றும் எங்கள் வீட்டில், அருகில் எடுத்த படங்கள் என இங்கே வரிசையாய் ...
ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா ...

ஐஸ் வைத்த மரம்
அழகா வீட்டின் முன் ...
பாதை எல்லாம் கட்டியான
பனிச் சறுக்கு ரோட்டிலே ...
பாதை எல்லாம் கட்டியான
பனிச் சறுக்கு ரோட்டிலே ...
குதித்தோடி உருண்டாயோ
தாவிப் புரண்டாயோ ...
வெண்கட்டித் தோட்டத்துள்
புதையுண்ட சிறுவீடு
தபால்காரர்:
என் கடன் பனியிலும்
பணி செய்வதே !!!
தார் ரோட்டை மறைத்து
தரையிறங்கிய வெண்மேகம்
வெண்பட்டில் முளைத்த
கண்ணாடிப் புற்கள்
எவ்வளவோ சேகரித்தும் ...
பனிமனிதன் செய்ற அளவிற்கு தேறலையே !!!
மொத்தமாய் உறைந்த
முள்நீர்த் தொட்டி
விரிசடை வெண்சடை
பரப்பிய கூரை
அம்மா தினம் பேன்-கேக் ஊத்தி தர்றாங்க. நாம அவங்களுக்கு ஐஸ்-கேக் கொடுக்கலாம் ...
10 comments:
padamellam super... :)
சதங்கா,
படங்கள் சூப்பர். ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்குமே!!
பகிர்ந்திடுவதற்காக சிரமம் பாராமல் படங்கள் எடுத்துப் பதிந்திருக்கிறீர்கள்.
பார்க்கும் போதே குளிருகிறதே:)!
குட்டீஸ் போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
கமெண்டுகளும் அருமை.
இராம்/Raam said...
//padamellam super... :)//
thanks a lot !
பிரேம்ஜி said...
//படங்கள் சூப்பர். ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்குமே!!//
mikka nadri. ippo parava illai. innum veettuk kooraikalil pani urugama irukku endral paarungal :))
ராமலக்ஷ்மி said...
//பகிர்ந்திடுவதற்காக சிரமம் பாராமல் படங்கள் எடுத்துப் பதிந்திருக்கிறீர்கள்.
பார்க்கும் போதே குளிருகிறதே:)! //
ellaam ungalukkaagave !!!
//குட்டீஸ் போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.//
avangaluke theriyaathu padam pudichathu. nillunga endral, intha kaalathu pasanga enge nikkuthunga :))
//கமெண்டுகளும் அருமை.//
maravaamal kurippitatharkku mikka nandri.
அன்பின் சதங்கா
அருமை அருமை - குறு வரிகளுடன் கூடிய குளிரும் படங்கள் -- குட்டீஸூடன் -அழகு வரிகள்
பாராட்டுகள்
cheena (சீனா) said...
//அருமை அருமை - குறு வரிகளுடன் கூடிய குளிரும் படங்கள் -- குட்டீஸூடன் -அழகு வரிகள்
பாராட்டுகள்//
வழக்கம் போல அனைத்தையும் ரசித்து பாராட்டியதற்கு நன்றிகள் பல.
விரிசடை வெண்சடை...அஅ..ருரு..மைமை!
குளிருதாம்.
இந்த பருவத்தில் அங்கிருக்க ஆசை. ஆனால் கலிபோர்னியாவில் இப்படியெல்லாம் இல்லையே!!
குட்டிகளோடு சேர்ந்து பனிமனிதன் செய்யவும் ரொம்ப ஆசை.
நானானி said...
//விரிசடை வெண்சடை...அஅ..ருரு..மைமை!
குளிருதாம்.//
:))
//இந்த பருவத்தில் அங்கிருக்க ஆசை. ஆனால் கலிபோர்னியாவில் இப்படியெல்லாம் இல்லையே!!
குட்டிகளோடு சேர்ந்து பனிமனிதன் செய்யவும் ரொம்ப ஆசை.//
டக்குனு ஒரு டிக்கட்ட போட்டு வந்திருங்க எங்க ஊருக்கு. இப்ப தான் ஸீஸன் ஆரம்பம் இங்க.
Post a Comment