Friday, December 12, 2008

தார் ரோட்டு மழையில் நிழல் - 2008 Dec PIT contest



தார் ரோட்டு மழையில்
தவழும் செவ் விலையே

தவழும் இலை அழகில்
படரும் அதன் நிழலே !

---

இங்கோர் இலையுதிர் கால மழை நாளில், சட சடத்து உருளும் இலைகளெல்லாம் சத்தமின்றி குளித்திருக்க, சப்தமில்லாமல் சுட்ட படம். இந்த மாத பிட் போட்டிக்கு. நல்லா இருந்தா ஒரு வரி, 'நச்'னு பின்னூட்டுங்க :)))

ரெண்டு நாள் தான் இருக்காமே. போட்டிக்கு அனுப்பிடலாமா ???

15 comments:

துளசி கோபால் said...

அப்படியே ஐ கேட்சிங்கா இல்லை. அனுப்பி வையுங்க. நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல்:-)

ராமலக்ஷ்மி said...

ஒற்றைச் செவ்விதழின் நிழல் கீற்று
ஒரு அழகான கவிதையாய் தெரியுது.

//சப்தமில்லாமல் சுட்ட படம்//
//போட்டிக்கு அனுப்பிடலாமா ???//

சப்தமில்லாமல் அனுப்பிடலாம்.
சப்தமில்லாமல் பரிசை வென்றிடும்.
வாழ்த்துக்கள்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உதிர்ந்த இலை

யார்

உதிரத்தில் குளித்து

உலர்ந்தாய்?

நானானி said...

கருப்பு சிவப்பில் ஒரு கவிதை!
அனுப்பிடலாம்!!பரிசு உமக்கே! வென்று வாரும்!!

cheena (சீனா) said...

அருமையான படம் - தைரியமாக அனுப்பலாம் - சதங்கா - படமும் பாடலும் அருமை - நல்வாழ்த்துகள்

நாகு (Nagu) said...

எங்கியோ போயிட்டீரய்யா. அசோக் குமார் கேமிரா கெட்டுது...

சென்று வாரும்.
சென்று வாறும்.
பரிசு உமக்கே...

துளசி கோபால் said...

சதங்கா,
எனக்குத்தான் ஐ யில் தகராறா? தீர்ப்பை மாத்தணுமோ?

அச்சச்சோ....

திவாண்ணா said...

துளசி அக்கா சொன்னது போல அப்படியே நல்லா இல்லை. க்ராப் செஞ்சு நிழலை முக்கியமா காட்டி இருக்கலாம்.
படம் நல்ல படம்தான். போட்டி தலைப்புக்குதான் சரி வரலேன்னு தோணுது!

தமிழ் said...

படமும் கவிதையும் அருமை

வாழ்த்துகள்

KARTHIK said...

அருமையா இருக்கு கொஞசம் கிராப் செஞ்சு அனுப்பிடுங்க

சதங்கா (Sathanga) said...

வருகை தந்த நண்பர்களுக்கும், 'நச் :)', 'பச் :(' என்ற கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.

போட்டிக்கு படத்தை அனுப்பியாச்சு :))

வல்லிசிம்ஹன் said...

இலையும் பின்னணியும் வெகு அழகு சதங்கா.
நிழல் இன்னும் தெளிவா த் தெரியணுமோ?

வாழ்த்துகள். பரிசு கிடைக்க.

நட்புடன் ஜமால் said...

அருமையாக படம் பிடித்து

வரிகள் சேர்த்து (கோர்த்து)

எங்கள் கண்களுக்கு விருந்து,

வேறு வேண்டுமா விருது...

மே. இசக்கிமுத்து said...

புகைப்படம் மிகவும் நச்சென்று இருக்குதுங்கோ...

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா, அதிரை ஜமா, இசக்கிமுத்து,

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

ஜமால், உங்களைப் போன்றவர்களின் பாராட்டு இருக்க பரிசெதற்கு !!! ரொம்ப சந்தோஷம்.