Tuesday, June 23, 2009

நயம் மிகு நயாகரா நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

கெளம்பிட்டோம்ல ... ரொம்ப நாளா பார்க்கணும் என்று, ஒரு சில முறை ஆரம்பித்தும் போக முடியாது, தற்போது நிறைவேறியது நயாகரா நீர்வீழ்ச்சி பயணம். எங்க ஊரில் இருந்து போக வர இரண்டாயிரத்து ஐநூறு மைல். வண்டி ஓட்டிருவோமா ? பசங்களுக்கு சரியா வருமா ? எங்கெங்கே தங்குவது ? சாப்பாடு என்ன பண்றது ? ... இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் தான் பயணத்தை ஆரம்பித்தோம். நினைத்தபடி, போட்ட ப்ளான் படி எல்லாம் நலமே இருந்தது.

நயாகரா பத்தி ஒரு சில வரிகள் எளிமையா சொல்லிட்டு, உங்களுக்காக படங்கள் கீழே.

காடு மேடு
பள்ளம் பதுங்குழி,

எல்லாம் கடந்து
நில்லாமல் தவழ்ந்து,

இருநாட்டை இணைத்து
சளசளவென இசைத்து,

கொட்டும் அழகில்
ஒட்டியது மனதில் !



எங்கோ பிறந்து,
எதிலும் தவழ்ந்து !


ஆற்றை நித்தம் காண,
வீட்டை கட்டினேன் !


பார்த்து ஓடு,
பள்ளம் இருக்கு அங்கே !!


அலை மோதி,
புகை கிளம்பும் !


இங்கிருந்து பார்த்தால்
ஏதும் தெரிகிறதா ?


சற்று தள்ளி வந்தால்,
சள சளப்புப் பேரிறைச்சல்


அம்மாடியோவ்.....
இன்னிசையாய் ஒலிக்க
இதயம் சிலிர்த்தது !


கரும் பாறையும்
கசிந்து உருகும்.


அக்கரை சென்று பார்த்தால்
அற்புதக் காட்சியாம்,
இக்கரையில் இவ்வளவே !


நீர்த் துகள் காற்றிலே,
புகை மண்டலம் விண்ணிலே.


கண் கொள்ளா காட்சி,
நயாகரா நீர்வீழ்ச்சி !

---

ஜூன் 25, 2009 விகடன் முகப்பில்

ஜூன் 25, 2009 யூத்ஃபுல் விகடனில்

Thursday, January 29, 2009

ஐஸ் ஸ்ட்ராம் - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக‌ வீட்டுக்குள்ள கட்டிப் போட்ட ஐஸ் ஸ்ட்ராம், ஒருவாராக இடத்தைக் காலி செய்தது. இறுகிப் போயிருந்த ஐஸ், பகலவன் கருணையால் இப்ப இளக ஆரம்பித்திருக்கிறது.

நேற்று முன் தினம், ஒரு அரை நாள் அலுவலகம் சென்ற போது (பனியைப் பொருட்படுத்தாது, என் கடன் பணி செய்து கிடப்பதே :))) வழியில் எடுத்த புகைப்படங்கள், மற்றும் எங்கள் வீட்டில், அருகில் எடுத்த படங்கள் என இங்கே வரிசையாய் ...


ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா ...


ஐஸ் வைத்த மரம்
அழகா வீட்டின் முன் ...


பாதை எல்லாம் கட்டியான‌
பனிச் சறுக்கு ரோட்டிலே ...


பாதை எல்லாம் கட்டியான‌
பனிச் சறுக்கு ரோட்டிலே ...


குதித்தோடி உருண்டாயோ
தாவிப் புரண்டாயோ ...


வெண்கட்டித் தோட்டத்துள்
புதையுண்ட சிறுவீடு


தபால்காரர்:
என் கடன் பனியிலும்
பணி செய்வதே !!!


தார் ரோட்டை மறைத்து
தரையிறங்கிய வெண்மேகம்


வெண்ப‌ட்டில் முளைத்த‌
க‌ண்ணாடிப் புற்க‌ள்


எவ்வளவோ சேகரித்தும் ...


பனிமனிதன் செய்ற அளவிற்கு தேறலையே !!!


மொத்தமாய் உறைந்த
முள்நீர்த் தொட்டி


விரிசடை வெண்சடை
பரப்பிய கூரை


அம்மா தினம் பேன்-கேக் ஊத்தி தர்றாங்க. நாம அவங்களுக்கு ஐஸ்-கேக் கொடுக்கலாம் ...

Saturday, January 10, 2009

பிடித்ததில் எடுத்தது ! 2009 Jan PIT Contest

'எடுத்ததில் பிடித்தது' என்று பார்க்கும்போது, அதில் வரும் ஏகப்பட்ட குவியலில் (சொல்லிக்க வேண்டியது தான் !! :)) 'பிடித்ததை எடுக்க' போராட்டம்.

வாங்க, நீங்களும் களத்தில குதிங்க. தெரிவில்லாத இக்குவியலில், உங்க செலக்ஷன் என்னன்னு பின்னூட்டுங்களேன்.

இந்த முறை, வோட்டிங் பார்த்து போட்டிக்குள்ள போகலாம் என எண்ணம் :))

கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் --- இன்னும் நான்கு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள வந்து, மேலும் உங்க பங்குக்கும் குழப்'பிட்'டுப் போங்க =:)))



படம் 1: அமெரிக்கத் தலைநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு ஆலய கோபுரம்.

வான் தொடும் வெண்மை
கண் படும் மென்மை.
சிற்பங்களின் அழகில்
தென்படும் பெண்மை.



படம் 2: சிகப்பு ரோஜா.

செக்கச் செவந்தவளே
செகப்பு ரோஜாவே !
பூக்களின் அரசியே
புன்னகைக்க வைப்பாயே !!!



படம் 3: பிங்க் பூக்கள்

பச்சைப் புற்களில்
பதுங்கும் பூக்களே,
பயம் கொள்ள வேண்டாம்
பறித்திட மாட்டோம் !!!



படம் 4: ஆரஞ்சுப் பூ

என்ன தான் பேரோ ?
ஆரஞ்சுப் பூவே !
குலை தள்ளும் அழகில்
கலை கண்டு மகிழ்வோம் !!!



படம் 5: வாத்துக்கள்

தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!



படம் 6: வண்ண மீன்கள்

எத்தனை வண்ணங்கள் இங்கு
அத்தனையுமே அழகு,
நீரின் குளிர்ச்சியிலே அவை
சேர்ந்து நிறைத்ததுவே !



படம் 7: மீசைக்கார மீன்கள்

கரை தொடும் நீரில்
நுரை தள்ள ஆடும்
மீசைக்கார மீன்களோடு, ஒரு
பாசக்கார வாத்து !!!



படம் 8: உரித்தால் ஒன்றுமில்லை

உருண்டு பருத்திருக்கும்
உரித்தால் ஒன்றுமில்லை.
புரிந்தால் வாழ்விலே
கவலை என்றுமில்லை !!!
(அப்பாடா, ஒரு தத்துவமும் சொல்லியாச்சு :)))