வாங்க, நீங்களும் களத்தில குதிங்க. தெரிவில்லாத இக்குவியலில், உங்க செலக்ஷன் என்னன்னு பின்னூட்டுங்களேன்.
இந்த முறை, வோட்டிங் பார்த்து போட்டிக்குள்ள போகலாம் என எண்ணம் :))
கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் --- இன்னும் நான்கு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள வந்து, மேலும் உங்க பங்குக்கும் குழப்'பிட்'டுப் போங்க =:)))

படம் 1: அமெரிக்கத் தலைநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு ஆலய கோபுரம்.
வான் தொடும் வெண்மை
கண் படும் மென்மை.
சிற்பங்களின் அழகில்
தென்படும் பெண்மை.
படம் 2: சிகப்பு ரோஜா.
செக்கச் செவந்தவளே
செகப்பு ரோஜாவே !
பூக்களின் அரசியே
புன்னகைக்க வைப்பாயே !!!

படம் 3: பிங்க் பூக்கள்
பச்சைப் புற்களில்
பதுங்கும் பூக்களே,
பயம் கொள்ள வேண்டாம்
பறித்திட மாட்டோம் !!!
படம் 4: ஆரஞ்சுப் பூ
என்ன தான் பேரோ ?
ஆரஞ்சுப் பூவே !
குலை தள்ளும் அழகில்
கலை கண்டு மகிழ்வோம் !!!

படம் 5: வாத்துக்கள்
தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!
படம் 6: வண்ண மீன்கள்
எத்தனை வண்ணங்கள் இங்கு
அத்தனையுமே அழகு,
நீரின் குளிர்ச்சியிலே அவை
சேர்ந்து நிறைத்ததுவே !

படம் 7: மீசைக்கார மீன்கள்
கரை தொடும் நீரில்
நுரை தள்ள ஆடும்
மீசைக்கார மீன்களோடு, ஒரு
பாசக்கார வாத்து !!!
படம் 8: உரித்தால் ஒன்றுமில்லை
உருண்டு பருத்திருக்கும்
உரித்தால் ஒன்றுமில்லை.
புரிந்தால் வாழ்விலே
கவலை என்றுமில்லை !!!
(அப்பாடா, ஒரு தத்துவமும் சொல்லியாச்சு :)))

