Sunday, August 24, 2008

Sea Lion, Seal - இரண்டும் ஒன்றா ?

இது வரை பார்த்தவற்றுள் மிகச் சுத்தமான மிருகக் காட்சி சாலை எனலாம். குரங்குகள் விலக்கி மற்ற இடங்கள் எல்லாம் அத்தனை சுத்தம். கழுதை கூட பள பள வென்றிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்ற மாதம் சென்ற மிசூரி ட்ரிப்பில் மறக்க முடியாததாக அமைந்தது அங்கு சென்ற மிருகக் காட்சி சாலை.

அதிலும் கடற் சிங்கங்களின் (Sea Lion) சாகசங்கள் அற்புதம். மொத்தம் மூன்று கடல் சிங்கங்களை வைத்து நாற்பத்தி ஐந்து நிமிட காட்சி. காட்சி தொடங்க சில நிமிடங்கள் இருக்கையில், மேடையில் நன்றாக தண்ணி அடிக்கிறார் ஒருவர் (ஐயோ அந்த தண்ணி இல்லைங்க :))). அப்படியே பார்வையாளர்கள் மேலும் பூத் தூவலாய். அந்த வெயிலுக்கு நம் மேல் படும் தூறல் அற்புதமாக இருந்தது .... காட்சி தொடங்கும் சரியான நேரத்திற்கு ... தரையில் நடந்து, சட சடவென நீரில் பாய்ந்து, அங்குமிங்கும் ஓடி ஆடி தமக்குரிய இருக்கைகளில் அமர்கின்றன அம்மூன்று கடல் சிங்கங்களும்.

ஆங் ... மறக்கறதுக்கு முன், தலைப்பை சொல்லித் தான் இந்த ஷோவை நடத்துபவர் ஆரம்பிக்கிறார். இரண்டும் ஒன்றே எனப் பலர் தவறாக நினைக்கிறோம். "எங்கேடா தம்பி 'அலெக்ஸ்', சீல் மாதிரி செய்து காட்டு" என்றவுடன். அதுவரை துறுதுறுவென (ஓடி என்று கூட சொல்லலாம்) சுற்றிக் கொண்டிருந்த 'அலெக்ஸ்' வாலைத் தரையில் வைத்து, குழந்தை போல் தவழ்ந்து காட்டி அனைவரின் கை தட்டலையும் பெற்றது.

இலைன், அலெக்ஸ், ரோசி என அவர்களுக்குப் பெயர்கள். படங்களில் பெரிதாகத் தெரிபவர் தான் தம்பி 'அலெக்ஸ்'. அவருக்கு வலப்புறம் இலைன், இடப்புறம் ரோசி. மூவருமே ஒருவருகொருவர் சளைத்தவர் அல்ல எனப் போட்டி போட்டு அசத்திவிட்டனர். அவர்களின் சாகசங்கள் கீழே படங்களில்.


காட்சி ஆரம்பத்திலேயே, நீரில் தடதடத்து, ரோசியின் லாவகமான ஒரு 'ஹர்டுல் ஜம்ப்'.


பொம்மைகளில் பார்த்திருப்போம். நடத்துனர் பந்தை எறிய, அதை மூக்கில் ஏற்றி (கூர்ம அவதாரம் போல்) நீரில் சாகசம் புரிய காத்திருக்கும் 'அலெக்ஸ்'.


அலெக்ஸ், பந்துடன் அப்படியே ஒரு ஜம்ப் நீரில்.


ரெடி ஃபார் த ஹர்டுல் ஜம்ப்.


கயிற்றை தாண்டி ...


அருமையான லேண்டிங் ...


இலைனின் வலையத்திற்குள் ஜம்ப்.


கொஞ்சம் கூட வளையத்தைத் தொடாமல் அருமையான லேண்டிங்க் ...


நீரில் பாய்ந்து வந்து, மேலெழும்பி, கூரையிலிருக்கும் மணியை அடிக்கும் இலைன்


நீரை விட்டு முழுதும் வெளியே ...


பார்வையாளராக வந்த சிறுமி ஒருவரின் நண்பியாய் இலைன்.


அலெக்ஸின் 'அப் சைட் டௌன்' போஸ். பார்வையாளர்களோடு கை தட்டும் இலைனும், ரோசியும்.


பார்வையாளர்களை நோக்கி 'டிஸ்க்' (ஸொவினீர்) எறிய சொல்லும் நடத்துனர்.


அட்டகாசமா பண்ணிட்டே டா, 'கிவ் மீ எ ஹை ஃபைவ்' எனும் நடத்துனர்.


இதுவரை வந்து காட்சியைக் கண்டு களித்த அனைவருக்கு நன்றி சொல்லும் அலெக்ஸ். உங்களுக்கும் சேர்த்து தாங்க :)

3 comments:

ராமலக்ஷ்மி said...

//இலைன், அலெக்ஸ், ரோசி என அவர்களுக்குப் பெயர்கள். படங்களில் பெரிதாகத் தெரிபவர் தான் தம்பி 'அலெக்ஸ்'. அவருக்கு வலப்புறம் இலைன், இடப்புறம் ரோசி. மூவருமே ஒருவருகொருவர் சளைத்தவர் அல்ல எனப் போட்டி போட்டு அசத்திவிட்டனர். அவர்களின் சாகசங்கள் கீழே படங்களில்.//

நீங்கள் கூறுவதெல்லாம்
உண்மை உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறில்லை என
உணர்த்தி விட்டன படங்கள்!

சதங்கா (Sathanga) said...

ராமலஷ்மி மேடம்,

//நீங்கள் கூறுவதெல்லாம்
உண்மை உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறில்லை என
உணர்த்தி விட்டன படங்கள்!//

படங்களைப் பார்த்து ரசித்து, கடற்சிங்கங்களைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

தேவன் மாயம் said...

படங்கள்ளாம் சூப்பர்.
இன்னும் நிறய பொடுங்கப்பு.