Saturday, August 2, 2008

தாமரைக் கோவில் - வெர்ஜீனியா

வெகு அமைதியான, அழகிய சுற்றுப்புறம். சுற்றிலும் பச்சைப் பசேல். நீண்ட பாதைகள். கீழிருந்து பார்த்தால் மேலே ஒரு மண்டபம் அதில் ஆறடி நடராஜர். மேலிருந்து பார்த்தால் கீழே ஒரு பெரிய கற் தாமரை கோவில். அதனுள் இரு நிலைகளில் தியான மண்டபங்கள்.

உலகின் முக்கிய மதங்கள் பற்றி தனித் தனியே விளக்கங்கள். அந்தந்த மதத்தினர் பயன்படுத்தும் பொருட்கள். ஒரு மாறுபட்ட மனதைக் கவரும் கோவில். வெர்ஜீனியா மாகானத்தில், யோகவில் எனும் இடத்தில் இருக்கிறது இக் கோவில்.


அங்க தூரத்தில மலை உச்சியில் ஒரு மண்டபம் தெரியுது பாருங்க. அங்க தான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிற நடராஜர் இருக்கிறார்.


மலரும் தாமரை மொட்டு வடிவில் கோவில் மேல் தளம்.


தாமரை இதழ்கள் விரிந்திருக்க சுற்றி பச்சைப் பசுமையுடன் அமைதியான ஏரி, அதில் வானின் பிம்பம்.


தாமரைக் கோவில் முன் நின்று


நடராஜர் மண்டபத்தில் இருந்து தெரியும் தாமரைக் கோவில். அதன் பின் அழகிய ஏரி.


மேல் தள தியான மண்டபத்தின் கூரை. இருள் கவிழ, மெல்லிய ஒளி கசிய, மனம் லயிக்க, அனைவரும் தியானிப்பர் இம் மண்டபத்தினுள்ளே !


பூத்துக் குலுங்கும் மலர்கள் வழி நெடுகிலும். கண் கவரும் நிறம் கொண்ட அவற்றில் இரண்டு இங்கே.


வெண் பூ அழகு,
மரகத மஞ்சள் அழகு,
நீள் பச்சை காம்பழகு.
விழும் நிழலோ அதனினும் அழகு !

2 comments:

cheena (சீனா) said...

தாமரைக்கோவில் அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது - பார்க்க வேண்டும். டெல்லியில் ஒன்று இருக்கிறது - சென்று படம் எடுத்து வந்தோம்

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

//தாமரைக்கோவில் அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது - பார்க்க வேண்டும். //

வாங்க. வாங்க. ரத்தினக் கம்பளம் ரெடி :)