
நண்பர்களே, இது எங்கிருக்கிறது எனத் தெரிகிறதா ?
ஆம், மிசூரி செயின்ட் லூயிஸில் இருக்கும் கேட் வே ஆர்ச்சே தான்.
ஆகஸ்ட்-08 PIT போட்டிக்கு சமர்ப்பித்திருக்கிறேன். படத்தை க்ளிக்கியும் பாருங்க. எப்படி இருக்கிறதென்றும் சொல்லிட்டுப் போங்க.
----
மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

ஆர்ச் - முழுத் தோற்றம்

அன்னாந்து பார்தேன், ஆர்ச் வானம் தொட்டது :)

ஆர்ச் உச்சியில் இருந்து -- கல(ங்)க்கலா இல்ல ! :))

ஆர்ச் உச்சியில் இருந்து.
18 comments:
அடப்போய்யா - பெரீசா எழுதினேன். கூகுள் சாப்பிட்டு விட்டது...
நாகு
ரெண்டு வாரம் முன்னாடிதான் அங்கன பக்கத்துல ஜூதாடிட்டு வந்தேன்.... அங்க இருந்து போன் போட்டேனே ஞாபகம் இருக்கா? நாகு...
படத்தை பெரியதாக பதிவில் தெரிய வைத்திருக்கலாமே... :-)
நாகு,
ஆமா நாகு. அதே தான். நீங்க தான் அங்கன வந்துட்டு, இங்கன வராமப் போய்ட்டீஹளே :( !!!!!
cvr,
மாத்தியாச்சு :))
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
மூன்றாவது கண்ணை எப்போது திறக்கப் போகிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். திறந்து விட்டீர்கள். உங்கள் திறமைகளின் அடுத்த பரிமாணமாக இந்த வலைப்பூ அமையப் போவது நிச்சயம். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதல் படமே வெற்றியின் நுழை வாயிலுக்குள் இட்டுச் செல்லட்டும்.
அதற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!
சிவிஆர் சொன்ன மாதிரி படத்தைப் பெரிதாக்கியிருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. அவரது
http://cvrintamil.blogspot.com/2008/07/blog-post_19.html
பதிவினைப் பார்க்கவும். அதில் இப்பிரச்சனைக்கு பலரின் ஆலோசனைகளை வெளிக் கொணர்ந்து நந்து அவர்கள் சொன்ன தீர்வை எளிதானதென அறிவித்திருக்கிறார். அதைப் பின் பற்றி எனது பிட் பதிவுகளில் படங்களைப் பெரிதாக்கியிருக்கிறேன் பாருங்கள். அதே போல இப்படத்தையும் செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
ராமலஷ்மி மேடம்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களின் ஊக்கங்கள் இங்கே ஆக்கங்களாக :))
சி.வி.ஆர் போஸ்ட் இப்ப தான் படிச்சிட்டு வரேன். அதுக்குள்ள இந்தப் பதிவில் மாற்றம் செஞ்சு மேலும் சில படங்கள் ஏத்திட்டேன். அடுத்த பதிவுகளில் (நேரம் ஒத்துழைக்கணும்) சி.வி.ஆர் சொன்ன முறையை செய்து பார்த்திடுவோம்.
வருக வருக - நல்வாழ்த்துகள்
சீனா ஐயா,
//வருக வருக - நல்வாழ்த்துகள்//
வரவேற்பு குறித்து மிக்க மகிழ்ச்சி.
superb angle.. nice perspective. All the best wishes
சூர்யா,
//superb angle.. nice perspective. All the best wishes//
ஆஹா அற்புதமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
ஆஹா! சதங்கா! :)) இப்பத்தான் பார்க்குறேன்.
வாழ்த்துகள்! வெற்றியின் 'நுழைவாயிலுக்கு' :)). படம் ஜூப்பர்.
வாங்க புதுத்தேனீ !
//வாழ்த்துகள்! வெற்றியின் 'நுழைவாயிலுக்கு' :)). படம் ஜூப்பர்.//
ரசிப்புக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
//முதல் படமே வெற்றியின் நுழை வாயிலுக்குள் இட்டுச் செல்லட்டும்.
அதற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!//
-என வாழ்த்தினாலும் வாழ்த்தினேன் வந்து விட்டீர்கள் முதல் பதினொன்றில் ஒன்றாக..! அடுத்த சுற்றில் முதலாவதாய் வரவும் வாழ்த்துகிறேன்!
ராமலஷ்மி மேடம்,
////முதல் படமே வெற்றியின் நுழை வாயிலுக்குள் இட்டுச் செல்லட்டும்.
அதற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!//
-என வாழ்த்தினாலும் வாழ்த்தினேன் வந்து விட்டீர்கள் முதல் பதினொன்றில் ஒன்றாக..! அடுத்த சுற்றில் முதலாவதாய் வரவும் வாழ்த்துகிறேன்!//
இதுவே ஒரு பெரிய வெற்றி என்று தான் சொல்லணும். முக்கியமா உங்களின் ஊக்கத்திற்கான வெற்றி தான் இது. என் பங்கு மிகச் சிறிதே.
மூன்றாவது கண் என்றதும், நக்கீரன் போல நெற்றிக் கண்ணை திறக்கப் போகிறீர்கள் என நினைத்தேன்.
காமிராவை கையில் எடுத்திருக்கிறீர்கள்.
நல்ல முயற்சி. எனக்கு ஒரு விசா போடுங்கள். உலகை சுத்திப் பார்த்து ரொம்ப நாளாச்சு
செல்வா,
வருகைக்கு மிக்க நன்றி. நக்கீரன் போல நெற்றிக் கண் திறக்க அறிவு நிறைய வேண்டும். நமக்கு அதெல்லாம் சரிப்படாது, அதனால் அழகாக படமெடுக்கும் காமிராவின் துணையோடு ஆரம்பித்திருக்கிறேன்.
//நல்ல முயற்சி. எனக்கு ஒரு விசா போடுங்கள். உலகை சுத்திப் பார்த்து ரொம்ப நாளாச்சு//
நிச்சயமா. உங்க விசா ரெடி. இப்போதைக்கு யு.எஸ். சுத்திப் பார்க்கலாம். ஏற்கனவே ரிச்மண்ட் லோட்டஸ் டெம்ப்பிள் போட்டிருக்கிறேன். தற்சமயம் மிசூரி சூ. இவ்விரண்டு இடங்களையும் பாருங்கள் நண்பரே.
Post a Comment