Wednesday, August 6, 2008

சிகப்பு ரோஜாக்கள்

ரோஜாப்பூ பிடிக்காது என்று யாராவது சொல்லுவாங்களா என்ன ? பூக்களிலேயே ஒரு தனியிடத்தை தக்கவைத்திருக்கும் பூ ரோஜா தான் இல்லையா ?! அதும் அந்த கருமை கலந்த சிகப்பு ரோஜா, எங்க இருந்தாலும், அந்த இடத்திற்கு ஒரு தனி அழகு வந்து விடும் (இந்தப் பதிவைப் போல :)))











Saturday, August 2, 2008

தாமரைக் கோவில் - வெர்ஜீனியா

வெகு அமைதியான, அழகிய சுற்றுப்புறம். சுற்றிலும் பச்சைப் பசேல். நீண்ட பாதைகள். கீழிருந்து பார்த்தால் மேலே ஒரு மண்டபம் அதில் ஆறடி நடராஜர். மேலிருந்து பார்த்தால் கீழே ஒரு பெரிய கற் தாமரை கோவில். அதனுள் இரு நிலைகளில் தியான மண்டபங்கள்.

உலகின் முக்கிய மதங்கள் பற்றி தனித் தனியே விளக்கங்கள். அந்தந்த மதத்தினர் பயன்படுத்தும் பொருட்கள். ஒரு மாறுபட்ட மனதைக் கவரும் கோவில். வெர்ஜீனியா மாகானத்தில், யோகவில் எனும் இடத்தில் இருக்கிறது இக் கோவில்.


அங்க தூரத்தில மலை உச்சியில் ஒரு மண்டபம் தெரியுது பாருங்க. அங்க தான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிற நடராஜர் இருக்கிறார்.


மலரும் தாமரை மொட்டு வடிவில் கோவில் மேல் தளம்.


தாமரை இதழ்கள் விரிந்திருக்க சுற்றி பச்சைப் பசுமையுடன் அமைதியான ஏரி, அதில் வானின் பிம்பம்.


தாமரைக் கோவில் முன் நின்று


நடராஜர் மண்டபத்தில் இருந்து தெரியும் தாமரைக் கோவில். அதன் பின் அழகிய ஏரி.


மேல் தள தியான மண்டபத்தின் கூரை. இருள் கவிழ, மெல்லிய ஒளி கசிய, மனம் லயிக்க, அனைவரும் தியானிப்பர் இம் மண்டபத்தினுள்ளே !


பூத்துக் குலுங்கும் மலர்கள் வழி நெடுகிலும். கண் கவரும் நிறம் கொண்ட அவற்றில் இரண்டு இங்கே.


வெண் பூ அழகு,
மரகத மஞ்சள் அழகு,
நீள் பச்சை காம்பழகு.
விழும் நிழலோ அதனினும் அழகு !

மஹாபலிபுரம்

மஹாபலிபுரம் பொதுவா எல்லோரும் செல்கிற இடம் தான். "கல்லிலே கலை வண்ணம் கண்டான்" என்ற கவியரசரின் வரிகள் எத்துனை உண்மை. ஐந்து ரதம், அர்சுண மண்டபம், ஒற்றைக் கல் என எல்லாம் யாரோ தற்போதும் உட்கார்ந்து செதுக்குவது போல உளியின் ஓசை செவியினில் கேட்டுக் கொண்டே இருக்கும் இடம்.

டிசம்பர் 2004ல் எடுத்த படங்கள். அதில் சிறிய அளவுகளாக்கி என் தம்பிக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். ஒரு முறை கணினியில் வைரஸ் புகுந்து அனைத்தயும் இழக்க நேரிட்டதில் அழகிய மஹாபலிபுரம் படங்கள் போனது. பிறகு என் தம்பி அனைத்து படங்களையும் மின்னஞ்சல் செய்தான். அவற்றிலிருந்து சில கிழே.















Friday, August 1, 2008

நுழைவு வாயில்



நண்பர்களே, இது எங்கிருக்கிறது எனத் தெரிகிறதா ?

ஆம், மிசூரி செயின்ட் லூயிஸில் இருக்கும் கேட் வே ஆர்ச்சே தான்.

ஆகஸ்ட்-08 PIT
போட்டிக்கு சமர்ப்பித்திருக்கிறேன். படத்தை க்ளிக்கியும் பாருங்க. எப்படி இருக்கிறதென்றும் சொல்லிட்டுப் போங்க.

----

மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.


ஆர்ச் - முழுத் தோற்றம்


அன்னாந்து பார்தேன், ஆர்ச் வானம் தொட்டது :)


ஆர்ச் உச்சியில் இருந்து -- கல(ங்)க்கலா இல்ல ! :))


ஆர்ச் உச்சியில் இருந்து.